108 ஆம்புலன்ஸில் பிரசவம் : தாயும் சேயும் நலம்

வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் நடந்த பிரசவதிற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

Update: 2024-06-07 10:26 GMT

வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் நடந்த பிரசவதிற்கு பிறகு பெண் குழந்தை, தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெருநிலா கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் வரதராஜ், என்பவர் மனைவி கல்பனா வயது 23 இவர்களுக்கு, முதல் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கல்பனா கர்ப்பமாகி பசும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜுன். 7ம் தேதி அதிகாலை 3 மணி அளவில், கல்பனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே கல்பனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, 108 அவசர கால மருத்துவர் நுட்புணர். தேவபாலன் 108 ஓட்டுனர் ராஜேந்திரன் ஆகியோர் தேவையான முதல் உதவி செய்து, பசும்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர், அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தாயும் செய்யும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 108 ஆம்புலன்ஸில் முதலுதவி செய்து பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவர் நுட்புணர். தேவபாலன் மற்றும் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர்களுக்கு கல்பனா, வரதராஜன் தம்பதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News