பொன்னமராவதியில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்!
பொன்னமராவதியில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 09:28 GMT
துய்மைபணியளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்
பொன்னமராவதி பேரூராட்சியில் விழா நடைபெற்றது. பொங்கல்விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சித் துணைத் தலைவர் கா. வெங்கடேஷ், செயல் அலுவலர் மு.செ. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடை மற்றும் அரிசி, வெல்லம், பொங்கல் பானை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பேரூராட்சி உறுப்பினர்கள் தி. ராஜா, நாகராஜன், ப. அடைக்கி, இளநிலை உதவியாளர் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.