மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பாபநாசம் பகுதியில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-19 06:18 GMT

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான சாலைகளுள் ஒன்று. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது. தற்போது சாலையோரம் மழை நீர் வடிகாலுடன் சாலை போடப்படுகிறது. பாபநாசம் மெயின் சாலையில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் முழுமைப் பெறாமல் ஆங்காங்கே பள்ளமாய் உள்ளது.

பாபநாசம் கடை வீதி தெற்கு ராஜவீதி வங்கி ஏடிஎம் , வங்கி கோயில், கடை முன்னாள் பள்ளமாய் உள்ளதால் வயதானவர்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். இரவு நேரங்களில் பள்ளத்தை கவனிக்காவிட்டால் அதில் விழுந்து காயமேற்படும். இந்தப் பணியால் மெயின் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாரக் கணக்கில் நடக்கும் இந்தப் பணியை விரைந்து முடிக்க பாபநாசம் பகுதி சமூக ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News