போலி கிரயம் செய்துள்ள நிலத்தை மீட்டு தர கோரிக்கை !
கொங்கணாபுரம் அருகே குடியிருப்பு வீடுகளை அபகரிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை கோரி 50 க்கும் மேற்பட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 11:13 GMT
எடப்பாடி கொங்கணாபுரம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பேரில் போலி கிரயம் செய்துள்ளதாகவும் தங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஒன்றியம் கட்சுப்பள்ளி கிராமம் கோவலன்காடு,பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தங்களது சொந்த நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது சொந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் நிலத்தை போலியாக கிரயம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பல நூறு ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்களுக்கு தெரியாமல் போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் தங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அப்பகுதியினர் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.