தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை !!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-25 06:58 GMT

விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோடைகால மழையால் பாதிக்கப்பட்ட நெல், எள், உளுந்து பயிர்களுக்கு தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை கால மழையால் பாதிக்கப்பட்ட நெல், எள், உளுந்து, வாழை, பருத்தி போன்ற பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தது உள்ளார்கள். மாவட்ட முழுவதும் சுமார் 80 சதவீதத்திற்கு மேலாக பெய்த கோடை கால கனமழையால் பட்டுகோட்டை வட்டத்தில் பல ஊர்களிலும் திருவோணம், வெட்டிக்காடு, ஈச்சன்விடுதி, ஊரணிபுரம், பூதலூர், தஞ்சாவூர், குருங்குளம், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, திருப்பந்துருத்தி, மணலூர், வீரமாங்குடி, கூடலூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரகாரம், கும்பகோணம், தாராசுரம், மேலகாவேரி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், பேராவூரணி, பூக்கொல்லை, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், சம்பைப்பட்டினம், கழனிவாசல், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஓரத்தநாடு, ஆயக்குடி என மாவட்ட ம் முழுவதும் கொட்டிதீர்த்த கோடை கால கனமழையால் பல லட்சம் ஏக்கர் அறுவடை நெல் பயிர்கள் மற்றும் விளைந்த எள், உளுந்து, பருத்தி, வாழை வயல்களில் மழை தண்ணீர் வடியாது நின்றதால் பயிர்கள் முழுவதும் அழிந்து விட்டது.

இதனால் கடன் வாங்கி கஷ்டப்பட்டு பயிர் செய்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு மன வேதனை அடைந்து உள்ளனர். எனவே பாதிக்கப் பட்ட நெல், எள், உளுந்து. பருத்தி, வாழை பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழக அரசும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடியாக உரிய இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்றவாறு உடனடியாக போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News