தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை !
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் வி. ஞானகுரு பேட்டி அளித்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-10 05:25 GMT
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் வி.ஞானகுரு பேட்டி அளித்தார்.
மேலும் பல்வேறு கோரிக்கைக்களான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏழை, எளிய விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்து மைதானத்தில் நடைபயிற்சி மற்றும் விளையாடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
தேசிய அளவில் முதல்இடம், இரண்டாம் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட பயிற்சியாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க ஆவண செய்ய வேண்டும்.இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.