கனரக வாகனங்களுக்கு பகலில் தடை விதிக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், பழநியின் மைய பகுதியில் காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பலசரக்கு கடைகள் என 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பகல் நேரத்திலேயே கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் காந்தி மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2024-04-15 05:41 GMT

கனரக வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம், பழநியின் மைய பகுதியில் காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பலசரக்கு கடைகள் என 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தற்போது இங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சில கடைகள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பல கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இரும்பு கம்புகளை போட்டு தடுப்புகள் அமைத்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கடைகளுக்கு பொருட்கள் இறக்க வரும் லாரிகள் பகல் நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்து நின்று விடுகின்றன. இதனால் பகல் நேரங்களில் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
Tags:    

Similar News