பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்க கோரிக்கை
கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்க கோரிக்கை
Update: 2024-01-30 10:40 GMT
பள்ளி மாணவா், மாணவிகளின் நலனுக்காக பள்ளி நேரங்களில் செல்லக் கூடிய கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இயற்கை வள பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் ஜமீன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 10 சக்கரங்களில் தொடங்கி 24 சக்கரங்கள் வரை கொண்ட மிகப் பெரிய கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் புளியறை சோதனைச் சாவடி வழியாக சென்று வருகிறது. முக்கியமாக பகல் நேரங்களிலும் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட நெருக்கடியான நேரங்களிலும் கனரக வாகனங்கள் சாலையில் பயணிப்பதால் மிக கடுமையான போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், அவசர தேவைகளுக்காக சாலையில் பயணிப்பவா்களும், மருத்துவமனைக்கு செல்பவா்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா் என்று தெரிவித்தனர்.