பேருந்து நிறுத்தங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டி கோரிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2024-04-22 04:26 GMT
பேருந்து நிறுத்தங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டி கோரிக்கை

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும், 3,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை பகுதியில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையிலும், மதுராந்தகம் -- செங்கல்பட்டு சாலையிலும், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், தலா ஒரு பேருந்து நிறுத்தம் புதிததாக கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement

இந்நிறுத்தத்தில், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, பேருந்துகளில் சென்று வருகின்றனர்.குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது, வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு குடிநீர் அவசியமாக தேவைப்படுகிறது. எனவே, பேருந்து நிறுத்தங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News