கள்ளத்தனமாக மது விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கள்ளத்தனமாக மது விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Update: 2024-06-14 09:03 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் அடுத்த பழவூர் கிராமத்தில், அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையில், மது வாங்கும் தனிநபரிடம், கூடுதலாக 5 ரூபாய் பெற்றுக்கொண்டு, அதிகபட்சமாக நான்கு பாட்டில் வரை மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள்ளா கட்டுவதற்காக, கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோரிடம், டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் பெற்றுக்கொண்டு, பெட்டி பெட்டியாகமொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். கடைக்கு வரும் 80 சதவீத பீர் பாட்டில்களை, கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோரிடம் கொடுத்து விட்டு,விரும்பிய சரக்கைகேட்கும் மதுப்பிரியர்களிடம், ஸ்டாக் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில், முன்னதாகவே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர், அதிக அளவில் வாங்கிச் சென்று, பொது இடங்களில் வைத்தே அதிக விலைக்கு விற்கின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீதும், அவர்களுக்கு துணைபோகும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.