சிவகாசி மாநகராட்சியில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி துவக்கம்

சிவகாசி மாநகராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

Update: 2024-07-03 07:47 GMT
பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி

தமிழகத்தில் சேதமடைந்த அல்லது பாழடைந்த நிலையில் உள்ள பொது மற்றும் அரசு கட்டிடங்கள் மற்றும் இதர உள் கட்டமைப்புகளை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பாக இடிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சியில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின் பேரில் பழுதடைந்த கட்டிடங்களை அடையாளம் கானும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இதில் மாரிமுத்து தெருவில் உள்ள இரண்டு சுகாதார வளாகங்கள்,முஸ்லீம் தைக்கா தெருவில் உள்ள சுகாதார வளாகம்,மாநகராட்சி ஏவிடி பள்ளி வளாகத்திற்குள் உள்ள 2 பழைய கடடிடங்கள், விஸ்வநத்தம் சாலை மணி நகர் சந்திப்பில் உள்ள பயணிகள் நிழற்குடை,கட்டளைபட்டி சாலையில் உள்ள கட்டிடம் என 19 பழைய பழுதடைந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 12 கட்டிடங்களை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதனை தொடர்ந்து மாநகராட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் 2வது கட்டமாக பழுதடைந்த கட்டிங்களை இடிக்கும் பணிகள் தொடங்கியது.

Tags:    

Similar News