குமரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
கன்னியாகுமரி மாவட்டம், குண்டுகுளம் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்துள்ள அரும நல்லூர் பகுதியில் குண்டுகுளம் அருகே சாலையோரமாக ஆறு வீடுகள் இருந்தன. இந்த வீடுகள் அதற்கு பின்னால் செல்லும் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடையூறு உள்ளதாக கூறி அந்த ஆறு வீடுகளை அகற்ற வேண்டும் என தனிநபர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆறு வீடுகளையும் அப்புறப்படுத்துமாறு கடந்த மூன்று மாதம் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று போலீசார் உதவியுடன் வருவாய்த் துறையினர் இடித்தனர். இதனால் அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் அங்கிருந்து நகர மறுத்தனர் நேற்று இரவு முதல் தொடர்ந்து தங்களின் உடைமைகளுடன் இடுப்பாடுகள் இருந்த இடத்திலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இது வரை அவர்கள் ஒருவர் கூட அங்கிருந்து நகரவில்லை. இது குறித்து அவர்கள் கூறுகையில்,
சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், ஒரு தனி நபருக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த தனி நபரால் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்றனர்.