நாகை புதிய பேருந்து நிலையத்தில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;
Update: 2024-03-14 00:46 GMT
நாகை புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகை மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டரணி சார்பில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று பேசிய நடிகையும் பாஜகவைச் சேர்ந்த குஷ்பூவை கண்டித்து நாகை புதிய பேருந்து நிலையத்தில் குஷ்பூ படத்தை துடைப்பதால் அடித்தும் தீயிட்டுக் கொளுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் மகளிர் அணி அமைப்பாளர் தமயந்தி மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்