தஞ்சாவூரில் விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-05-14 14:28 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

தஞ்சாவூரில் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தஞ்சாவூர் பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா.செங்குட்டுவன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தொழில்நுட்பப் பிரிவில் பணி நியமனம் இல்லை, தேவையான உதிரிபாகங்கள் வழங்காததால் முறையாக பேருந்துகளை இயக்க முடியவில்லை. விபத்து என்றால் ஓட்டுநர் பொறுப்பு,

Advertisement

வருவாய் குறைவு என்றால் நடத்துநர் பொறுப்பு, பயண முறிவு என்றால் தொழில்நுட்ப பணியாளர் பொறுப்பு என தொழிலாளர்களை காரணம் காட்டி பணிஇடைநீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் பி.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்  கே.அன்பு,

ஆட்டோ மாநகரச் செயலாளர் ராஜா, மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் ஆர்ப்பட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். சிஐடியு நிர்வாகிகள் ரஜினி, பணிமனை பொருளாளர் முருகேசன், துணைத் தலைவர் பரத்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பணிமனை கிளைச் செயலாளர் அ.செ.பழனிவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News