அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 30.ம் தேதி கல்குவாரி டென்டரின் போது நடந்த பிரச்சினையில் பாஜக பிரமுகர்களை தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அங்கு பணியில் இருந்த கனிமவளத் துறை அலுவலர்கள், பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான மோகன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், வன்முறை சம்பவத்தை கண்டித்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.