ராமநாதபுரம் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 10:52 GMT
அதிமுக
ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தெற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், நகர் கழகச் செயலாளர் பால்பாண்டி, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழ்நாடு இருப்பதால் தமிழனுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்தும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளை வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்த ஜாபர் சாதிக் என்பவரை கைது செய்து தமிழகத்தில் யாருக்கெல்லாம் இவருடைய பணம் சென்றிருக்கிறது என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் கடத்தல் கும்பலுடன் துணையாக இருந்த திமுக அரசு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.