பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வண்ணார்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 05:39 GMT

ஆர்ப்பாட்டம் 

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையில் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதிய நிர்ணய குழு கமிட்டி அறிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் மோகன், முருகன், கருமலையான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News