தாராபுரத்தில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் கோட்ட பொறியாளரை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ள கோட்ட பொறியாளர் ராணி கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் கோட்டத் தலைவர் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டச் செயலாளர் செந்தில்குமார் விளக்க உரையாற்றினர். மாநில தணிக்கையாளர் ஆறுச்சாமி துவக்க உரையாற்றினர். மேலும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன் வாழ்த்துரை வழங்கினார்.
நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும், அரசு விதிமுறைக்கு மாறாக பதவி உயர்வு வழங்கியதை பதவி இறக்கம் செய்ய வலியுறுத்தியும், தவறான முறையில் முதநிலை பட்டியல் வெளியிட்டதையும் பதவி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் முதன்மை இயக்குனர் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி தாராபுரம் கோட்ட பொறியாளர் மற்றும் உட்கோட்ட அலுவலர்களை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.