ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Update: 2024-01-03 06:05 GMT
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 1 மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் செய்தனர். வட்டார கிளை தலைவர் காந்திபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன், மாநில செயலாளர்கள் வீரகடம்ப கோபன், ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகளை சட்ட விதிகளுக்கு மாறாக மாறுதல் மற்றும் நியமனங்களில் செயல்படுகிற மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.