பகுஜன் சமாஜ் தலைவர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பகுஜன் சமாஜ் தலைவர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2024-07-08 06:12 GMT
பகுஜன் சமாஜ் தலைவர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், தொடர் கொலைகளுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு கோர்ட் முன்பு சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செல்வின் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News