ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

RTO அலுவலகம் முன்பு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவை நடத்தினர்.;

Update: 2024-07-08 09:47 GMT
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon
RTO அலுவலகம் முன்பு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவை. ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்ட செயலாளர் பசுவை பெரு. பாரதி தலைமையில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்தியா ஒன்றிய முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என பிஜேபி அரசை வலியுறுத்தியும், கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலையை கண்டித்தும், மாநிலம் தழுவிய அளவில் நடத்தி ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில் மணி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News