ஆத்த்தூர் அருகே பாலம் கட்டி தரக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் அருகே பாலம் கட்டி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உருவ பொம்மை செய்து பாடைகட்டி ஊர்வலமாக வந்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-30 13:21 GMT

நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஊராட்சியில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்து விட்டால் அருகில் உள்ள வசிஷ்ட நதியை கடந்து எதிர்புறத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக உள்ளது.

வசிஷ்ட நதியில் கழிவுநீர் அதிக அளவில் கலந்து செல்வதால் கழிவு நீரில் நீந்தி சென்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியில் பாலம் கட்டித் தர வேண்டும் எனக்கோரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துலக்கனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். இதற்காக வசிஷ்ட நதி பகுதியிலிருந்து இறந்தவர் உடலை எடுத்துச் செல்வது போல் பாடை கட்டி ஊர்வலமாக மேளதாளத்துடன் வந்தனர். இதை அறிந்த ஆத்தூர் நகர போலீசார் ஊர்வலம் செல்லக்கூடாது.மேலும் அடிக்கக் கூடாது

என தடுத்து நிறுத்தியதால் போலீசார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி வசிஷ்ட நதி பகுதியிலிருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று,

இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பாடையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News