ஐம்பதாயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழக முழுவதும் காலியாக உள்ள சத்துணவுபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-22 15:31 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக, நிரப்பி வளர்ச்சி துறை அலுவலர்களின் நெருக்கடியை தீர்க்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு ,முன்பு வழங்கியது போல அரசாணையின்படி இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களில், 50% பதவி உயர்வு வழங்க வேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கி குழு காப்பீடு திட்டத்தில் இணைத்திட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட இணை செயலாளர் ரஜினி தலைமையில், உணவு இடைவேளையின் போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags:    

Similar News