காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-12-22 11:28 GMT
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், விருத்தாச்சலம், மாநில பிரதிநிதித்துவ பேரவையில், மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி, சத்துணவு மையங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தியும், மக்கள் நல பணியாளர்களுக்கு வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் மதிய உணவு இடைவேளையில் வட்டார தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று,கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மதிய உணவு இடைவேளையின் போது, கரூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவியாளர் ராஜா, துணை வட்ட வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.