கோவிபட்டியில் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-05 10:52 GMT

மனு அளித்த நிர்வாகிகள்

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி புதுரோட்டில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைபள்ளியின் கழிவறை மற்றும்  சுற்றுச்சுவர் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இவற்றைச் சீரமைக்கக் கோரி பள்ளி தலைமையாசிரியரும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இணைந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

எனவே, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக சேதமடைந்த கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி  கோவில்பட்டி கோட்டாட்டசியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, முனைவர் சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், ஐஎன்டியுசி ராஜசேகர், ஆவல்நத்தம் லட்சுமணன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், மக்கள் நீதிமய்யம் ராதாகிருஷ்ணன், கணேசன், ரமேஷ், ஜெய்பீம் தாவீதுராஜா, தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Tags:    

Similar News