ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

வையப்பமலையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-07 09:39 GMT

வையப்பமலையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வையப்பமலை மின்சாரவாரியம் அலுவலகம் முன்பாக, ஸ்மாட் மீட்டர் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் ஸ்மாட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தி வருகின்றது. இதனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி தொழிலாளர்களுக்கு மானிய முறையில் பெறப்படும் மின்சாரமும் பாதிக்கப்படும். சிறு, குறு தொழில் செய்பவர்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல், கேஸ் போன்று மின்சார கட்டணமும் உயர்ந்து கொண்டே போகும் அபாயம் உள்ளது.

எனவே, இத்திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நேற்று, மல்லசமுத்திரம் அருகேயுள்ள வையப்பமலை மின்சார வாரியம் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன் தலைமையில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டகுழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றியகுழு உறுப்பினர்கள் துரைசாமி, ஈஸ்வரன், ஜோதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகி சாந்தி நன்றிகூறினார்.

Tags:    

Similar News