ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Update: 2023-12-12 09:38 GMT
. மத்திய அரசு மாநில அரசுகளை ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி வருகிறது, இதன் காரணமாக மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள், இந்த ஸ்மார்ட் மீட்டர் தத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, அருகே உள்ள சித்தாளந்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஆதிநாராயணன் தலைமை தாங்கி நடத்தினார், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரியின் தமிழக அரசு அந்தத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன, இது குறித்து சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஆதிநாராயணன் கூறும்போது மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநில அரசு ஏற்கக் கூடாது இதனால் மானியம் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடும் கேரளாவை போல மானியம் கிடைக்காவிட்டாலும் வாட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் இதனை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்