மேட்டூரில் சிஐடியு சார்பில் 11 கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்டம்,மேட்டூரில் சிஐடியு சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. .

Update: 2024-02-29 00:57 GMT

சேலம் மாவட்டம்,மேட்டூரில் சிஐடியு சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. .


சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கருப்பண்ணன் கண்டன உரை ஆற்றினார்.

இதில் மத்திய மாநில அரசு பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் 28,000 வழங்க வேண்டும், பஞ்சாலை ஆண், பெண் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப் சட்டத்தை நிரந்தர சட்டமாக அமலாக்க வேண்டும், ஜலகண்டாபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்பதாயிரம் பென்ஷன் வழங்க வேண்டும், நல வாரியத்தில் நிபந்தனை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும், கூட்டுறவு பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் துணை செயலாளர் வெங்கடேஷ்,மாவட்ட குழு உறுப்பினர் பொன் பீட்டர், மாவட்ட பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News