சிவன்மலையில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவன்மலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நில விவசாயிகள் குத்தகைதாரர்கள் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-07-05 09:31 GMT
காங்கேயம் அடுத்த சிவன்மலை அடிவாரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகன்சாமி தலைமையில் நடைபெற்றது. அரசர் காலத்தில் அரசர்களால் அரசு இடங்களை கட்டப்பட்ட திருக்கோவிலுக்கு பராமரிக்க வேண்டியும் பூஜை செய்ய வேண்டிய அரசர்களுக்கு சேர வேண்டிய வரிப்பங்கை நேரடியாக கோவிலுக்கு கொடுக்கச் சொல்லியோ அல்லது வரி பங்கிற்கு ஈடாக பூஜை போன்ற சேவகங்கள் செய்யச் சொல்லியோ அரசர்கள் மக்களை பணித்திருந்தனர். இவ்வரான நிலங்கள் இனாம் நிலங்களாக வகைப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களில் வரி பங்கானது திருக்கோயில் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நில உரிமை நிலத்தை அனுபவத்திலிருந்து மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்கள் விற்க்கோவா வாங்குவோர் அடமானம் வைக்கவோ போன்ற நில பரிவர்த்தனை செய்து வந்தனர்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இனாம் ஒழிப்புச் சட்டங்கள் கொண்டு வந்து உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்கின்ற கோட்பாட்டின்படி நிலத்தில் அனுபவத்தில் இருந்தவர்களுக்கு நில உரிமையை கொடுத்துவிட்டு கோவில்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய இழப்பீட்டு தொகையை அரசாங்கம் வழங்கிவருகின்றது. இதனால் வரை பல நூறு ஆண்டுகளாக மக்களின் அனுபவத்தில் இருக்கும் இனாம் நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்று கூறி கோயில் நிலங்களை மீட்கின்றோம் என்கின்ற போர்வையில் சட்டத்திற்கு முரணாக இந்த நிலங்களை அனைத்தையும் கையகப்படுத்தும் முயற்சியை இந்து சமய அறநிலைத்துறை செய்து வருகின்றது என்கின்றனர். இதன் ஒரு பகுதியாக விவசாய மக்களை அவர்களின் அறியாமையை பயன்படுத்தி மிரட்டி நயவஞ்சகமாக அவர்களை குத்தகையாளர்களாக மாற்றும் வேலையை செய்து வருகின்றது . மேலும் இனாம் நிலங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிமையானது என்பதை நிலைநிறுத்த வேண்டி இந்த கவனம்ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் அறநிலையத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது இனா ஒழிப்பின் போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமையை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமாக பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமாகவும் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியை இந்த அறநிலையத்துறை கைவிட வேண்டும், விவசாயிகளின் அறியாமையினால் இனாம் ஒழிப்பின் போது பட்டா பெற தவறிய மக்களுக்கு பட்டா பெறுவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கேயம் வெள்ளகோவில் பிஏபி கிளைகால்வாய் பாசன சங்க தலைவர் வேலுசாமி, தமிழ்நாடு சுற்றுச்சூழல்  பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,  இனாம் நில விவசாயிகள் குத்தகைதாரர்கள் வீடு மனை உரிமையாளர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News