தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த கோரி தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-06-19 04:12 GMT
ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரி அருகே பத்தூர் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பிரதான கோரிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோடை சாகுபடி செய்யப்பட்ட பருத்தி,நெல்,எள் பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தது . இது குறித்து தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நடத்தப்பட்ட கணக்கெடுப்பு சரிவர எடுக்கவில்லை எனவும் மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.