காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-07-04 06:35 GMT
காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

 ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது‌. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளைத் தலைவர் காட்டு ராணி தலைமை தாங்கினார். நேற்று மாலை காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை திரும்ப பெற்று பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் போன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தினை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
Tags:    

Similar News