மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்க சார்பாக ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்க சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-04 16:25 GMT
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்க தேனி மாவட்ட மையம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி, அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு ஆண்களும் பெண்களுமாக அலுவலர்கள் மரத்தடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.