மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த கோரி தமுமுக, மமக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி பள்ளபட்டியில் தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 05:09 GMT
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தோழர்களம் தமிழ்நாடு கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி பகுதியில் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர் களம்- தமிழ்நாடு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News