பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-05 14:30 GMT

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட விசிகவினர்

மத்திய மோடி அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர முறையை இரத்து செய்து , வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கை பேரிடருக்கு உரிய நிதி வழங்க மறுத்தும், இயற்கை பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும், ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன்.ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவித்து, நிதி வழங்காத மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட துணை செயலாளர் கிருட்டிணகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், குன்னம் தொகுதி துணை செயலாளர் பூவரசு, ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன் வரதராஜன் மனோகரன் இடிமுழக்கம் நந்தன் இளமாறன் பிச்சை பிள்ளை, பாஸ்கர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் கிட்டு விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன்,

மண்டல செயலாளர் அன்பானந்தம் மேல்நிலைப் பொறுப்பாளர் இளமாறன். முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், மாறன், லெனின் திருச்சி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மன்னர் மன்னன், மற்றும் பல்வேறு பிரிவை சேர்ந்த மாநிலத் துணைச் செயலாளர்கள்,

தமிழ் குமரன் அண்ணாதுரை, சீனிவாச ராவ், ராசித்தலி, பிரேம்குமார், பகதூர் அலி, ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனர் உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர, பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள். பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News