மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-06-19 11:37 GMT
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பில், கணக்கிட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கணக்கிட்டு பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மொபைல் ஆப்பு மூலம் கணக்கிட்டு பணி செய்திட மொபைல் போன் அல்லது டேப் வழங்க வேண்டும் / மொபைல் டேட்டா விற்கு மாதந்தோறும் ரூபாய் 500 வழங்கிட வேண்டும், பவருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட கணினி பிரிண்டர் கீபோர்டு மவுஸ் ஆகிய கணினி உதிரி பாகங்களை மாற்றி புதிதாக வழங்கிட வேண்டும், நெட்வொர்க் பிரச்சனைகளை சரி செய்திட அலைகளுக்குக் கூடாது, கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கணக்கீட்டாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவை வழங்கிட வேண்டும், ஏடிஓ பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார் .மின்வாரிய ஓய்வு பெற்ற அமைப்பின் மாவட்ட துணை தலைவர் கருணாநிதி கோட்ட நிர்வாகிகள் நாராயணன், கௌதமன், அண்ணாதுரை, நல்லுசாமி உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.