கால்வாய் உடைப்பை சீர் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் கால்வாய் உடைப்பை சீர் செய்யக்கோரி வலியுறுத்தி விவாசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-12 09:24 GMT

கன்னியாகுமரியில் கால்வாய் உடைப்பை சீர் செய்யக்கோரி வலியுறுத்தி விவாசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டும் இதுவரை சீரமைக்காமல் உள்ளது.   குறிப்பாக தோவாளை கால்வாய் தொடர் உடைப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் கடந்த 2021 நவம்பர் மாதம் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் அதை சரி செய்யாததால் மீண்டும் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது.        நாவல்காடு நாடான்குளம் ஒக்கி புயலின் போது உடைப்பு ஏற்பட்டது.  வேம்பனூர், சரல் பிரயேரா குளம் அதிக அளவில் மண் எடுத்ததனால் மடைகள் உடைப்பு ஏற்பட்டு தற்போது விவசாயம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் டவுன் வாலசவுந்தரி பிராந்தநேரி குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரி போதுமான அளவில் தண்ணீர் சேமிக்க வேண்டும்.      குலசேகரம் பகுதியில் மிருக்கரை குளத்திற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒரு வருடமாகியும் இதுவரையிலும் பணிகள் நடைபெறவில்லை.               

இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள  குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவி, துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் சின்னத்தம்பி, சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை மற்றும் பாசன துறை சேர்மேன் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News