டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு: மாவட்ட மலேரியா அலுவலர் திடீர் ஆய்வு

Update: 2023-10-25 12:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மருந்து அடிக்கும் பணி தீவிரம்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தொட்டியம்பட்டி ஊராட்சி அண்ணாநகர் மற்றும் மைலாப்பூர் ஊராட்சி அஞ்சுபுளிப்பட்டி ஆகிய பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் முன் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் டெங்கு ஏடிஸ் லார்வா ஒழிப்பு பணி புகை மருந்து அடிக்கும் பணிகளை பார்வையிட்டும் காய்ச்சல் பகுதியில் டெங்கு ஏடிஸ் லார்வா புழுக்கள்,மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றார்.இந்த ஆய்வின் மைலாப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா அடைக்கலசாமி,சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன்,பிரேம்குமார், டெங்கு முன்தடுப்பு களப்பணியாளர்கள்,கொசுப்புகைமருந்து அடிக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News