சின்னங்கள் கட்சி கரைத்துண்டு ஆகியவற்றிற்கு அனுமதி மறுப்பு

சின்னங்கள் கட்சி கரைத்துண்டு ஆகியவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

Update: 2024-06-04 08:05 GMT

சின்னங்கள் கட்சி கரைத்துண்டு ஆகியவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முதல் காந்தி அருங்காட்சியகம் வரை ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் காவல்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 9, 80, 271 வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 7 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பணித் தொகுதி வாக்குகள் எண்ணுவதற்கு ! மேஜை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காலை மணி முதல் எண்ணப்படும் நிலையில், வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாலை முதலே குழுமியுள்ளனர். கட்சி முகவர்கள் செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான முகவர்கள் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள் சின்னங்கள், கட்சி கரை துண்டுகளை மையங்களுக்குள் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

Tags:    

Similar News