கொடைக்கானல் மலைப்பகுதியில் அடர் பனி மூட்டம்
கொடைக்கானலில் அடர் பனி மூட்டம்,குளுமையான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.;
Update: 2024-05-18 01:50 GMT
அடர்பனிமூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை வேளை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில்,பிற்பகல் வேளையில் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்தது,இதனையடுத்து மாலை வேளையில் அடர்பனி மூட்டம் நிலவியது,குறிப்பாக பிரையண்ட் பூங்கா,ஏரிச்சாலை,மூஞ்சிக்கல், பேருந்து நிலையம்,அப்சர்வேட்டரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அடர் பனி மூட்டம் நிலவியது,
இதன் காரணமாக சாலைகளில் முகப்பு விளக்கிகளை எரியவிட்டப்படி வாகனங்கள் ஊர்ந்து படி சென்றனர், மேலும் பிரையண்ட் பூங்காவில் மலர்கள் தெரியாத வண்ணம் அடர் பனி மூட்டம் நிலவியது,இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் இந்த இதமான கால நிலையை அனுபவித்து சுற்றுலாப்பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.