குன்னத்தூரில் அசோலா வளர்ப்பு செயல் விளக்கம்!

விராலிமலை வட்டாரம் குன்னத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட அசோலா வளர்ப்பு செயல்விளக்கத்தை வேளாண் அலுவலர் சீலா ராணி ஆய்வு செய்தார்.

Update: 2024-05-22 04:51 GMT

அசோலா வளர்ப்பு செயல் விளக்கம்

அசோலா நீர் நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்தது. குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று அசோலா வளர்ப்பு. இதை கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச்சத்து மிகுந்த தீவனமாகப்பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் கணிசமாக குறைக்க முடியும். அசோலாவில் 25-30 விழுக்காடு புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படுகின்றன.

அசோலா வளர்ப்பு செயல்விளக்கத்தை குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ரிஷிகேசன், அனிருத் விக்ரம இன்பா, திவாகர், தருண், குரு பிரசாத், ஞான விக்னேஷ் உள்ளிட்டோர் செயல்விளக்கம் மூலம் விளக்கிக் கூறினர். ஏற்பாடுகளை கலைஞர் திட்ட தொகுப்பு அலுவலர் ரேவதி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் லட்சுமி பிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News