கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு !
கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது 1,000 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 06:06 GMT
காவல் ஆய்வாளர் கவிதா
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கடுக்கன் பட்டி தெற்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 02 பேரலில் சுமார் 1,000 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.