காங்கேயம் அருகே 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு !

காங்கேயம் வீரணம்பாளையம் அடுத்த சேமலைவலசில் 2 லிட்டர் சாராயம் 20 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு.  1வரை தாராபுரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   ;

Update: 2024-07-09 07:00 GMT
காங்கேயம் அருகே 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு !

சாராயம்

  • whatsapp icon
தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் சரவணன் தலைமை காவலர் பாண்டிச்செல்வம் ஆகியோர் தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம் வீரணம்பாளையம் அடுத்த சேமலைவலசில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரின் மகன் விஸ்வநாதன் 52 என்பவரை கைது செய்து 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊரலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய விஸ்வநாதன் என்பவரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News