கல்வராயன் மலைப்பகுதியில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 2,200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.

Update: 2024-06-27 04:21 GMT

 கல்வராயன் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 2,200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.  

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை உட்பட அனைத்து பகுதிகளிலும் மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய, 3 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கல்வராயன்மலை பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று ரெய்டு சென்றனர். அப்போது, தும்பராம்பட்டு பகுதி, பெரியார் ஓடை மற்றும் கிழக்கு மலை அருகே, பேரல்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு இருந்த 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்து, 1,185 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,436 லிட்டர் கள்ளச்சாராயமும், 148 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News