கல்வராயன் மலைப்பகுதியில் சாராய ஊரல் அழிப்பு !!
கல்வராயன் மலைப்பகுதியில் பேரல்களில் இருந்த 2,800 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே கொட்டி அழித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 09:50 GMT
சாராய ஊரல் அழிப்பு
கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பட்டிவளைவு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, பேரல்களில் இருந்த 2,800 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக, ஆண்டி மகன் ராஜேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.