தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2024-05-23 07:06 GMT

தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த கற்கோவிலான இங்கு இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வீதிஉலா நடந்தது. அதன்படி ஹம்ஸ வாகனம், சிம்மம், சேஷ, அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை உள்ளிட்ட வெவ்வேறு வாகனங் களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. 20-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் லட்சுமி நாராயணபெருமாள் எழுந்தருளினார். இதில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.
Tags:    

Similar News