திருமருகல் அருகே தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு !
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தேவபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த தேன்மொழியம்மை உடனமர் தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அக்கிராம மக்கள், மருளாளிகள் ஆகியோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது திருப்பணிகள் முடிவடந்ததையடுத்து நேற்று மகா குடமுழுக்கு நடந்தது.முன்னதாக குடமுழுக்கையொட்டி கடந்த 8-ந்தேதி கணபதி, லெட்சுமி, நவகிரக ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9-ந்தேதி பிரசன்னாபிஷேகம், 10-ம் தேதி தீர்த்தம் எடுத்தல், அங்குரார்பணம், முதல் காலம் ஆரம்பம், தீபாராதனை நடந்தது.
11-ம் தேதி 2-ம் காலம், பூர்ணாஹீதி, 3-ம் காலம் சுமங்கலி பூஜை, லெட்சுமி பூஜை நடந்தது.தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு புஷ்கலா உடனமர் ஹரிஹரபுத்திரர், காளியம்மன் கோவில் குடமுழுக்கும், தொடர்ந்து 9.15 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தது.
தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை தேவன்குடி திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.