வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர் ஆய்வு
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.108.66 இலட்சம் மதிப்பில் கல்லூரணி- குருனைகுளம் வரையில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 இலட்சம் மதிப்பில்; கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.6.50 இலட்சம் மதிப்பில் கல்குளம் ஊரணி ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம்; அரசு மானியத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.2.92 இலட்சம் மதிப்பில் குளியல் அறை தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், ரூ.5 இலட்சம் மதிப்பில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதியில் சுகாதார வளாகம் புரணமைப்பு மற்றும் தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழகண்டமங்களம் ஊராட்சி, கோட்டம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10.60 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும், சிந்தலகுண்டு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.20 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், கோட்டம் கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 இலட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், புலிக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 இலட்சம் மதிப்பில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.