வீரகேரளம்புதூரில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தர்கள்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற வெண்ணிமலை முருகன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-02-24 01:31 GMT
வீரகேரளம்புதூரில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தர்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற வெண்ணிமலை முருகன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் தினமும் காலை மாலைகளிலும் சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

10ம் நாளான இன்று கோவிலில் முருகர், தெய்வானை வள்ளிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனையும் நடைபெற்றது , இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பறவைக் காவடி எடுத்து வந்தது மக்களை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News