திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா்

Update: 2023-12-31 03:09 GMT

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதத்தையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. தென்மாவட்டங்களில் அண்மையில் பெய்த கனமழையால், பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியதையடுத்து,

கடந்த சில தினங்களாக திருச்செந்தூா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பேருந்து, காா், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் வந்த வண்ணம் உள்ளனா்.

பள்ளிகள் அரையாண்டு தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிற மாவட்டங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன.1-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் இப்போதே வரத் தொடங்கியுள்ளனா். பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி தரிசனம் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News