மேட்டூர் அணை நந்தி சிலைக்கு வர்ணம் பூசிய பக்தர்கள்.
மேட்டூர் அணை நந்தி சிலையில் பாசம் படிந்ததால் பக்தர்கள்.வர்ணம் பூசி அழகுபடுத்தினர்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். கடந்த 1925 இல் அணைக்கட்டும்போது நீர்ப்பரப்பு பகுதியில் வசித்த மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறினார் அங்கு கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் வீடுகள் அணைக்குள் இருந்தனர் 68 அடியாக சரியும்போது பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதிகளில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் இரண்டு அடி வெளியே தெரியும்.
நடபாண்டில் வறட்சியால் கடந்த பிப்ரவரி 4 தேதி 70.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்தற்பொழுது 45 அடியாக சரிந்ததால் 20 அடி உயரம் உள்ள நந்தி சிலை முழுவதும் தெரிய தொடங்கியது . மாதக்கணக்கில் நன்றி சிலை நீரில் மூழ்கி இருந்ததால் பாசம் படிந்து காணப்பட்டது. இந்த நிலையில் கொளத்தூர் அடுத்த பாலவாடி, கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் நந்தி சிலைக்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்தினர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்தி சிலையை கண்டு ரசித்துனர்.